7 பேரின் விடுதலை தொடர்பான ஆவணங்களை ஆளுநரிடம் தமிழக அரசு வழங்கியது

230
banwarilal-purohit

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பான ஆவணங்களை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் தமிழக அரசு வழங்கியது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், சிறை தண்டனை அனுபவித்து வருபவர்களை, ஆளுநரின் ஆலோசனையுடன் தமிழக அரசு உரிய முடிவு எடுக்கலாம் என்று அண்மையில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, கடந்த ஞாயிற்றுக் கிழமை முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில் 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில், 7 பேரையும் விடுவிப்பது தொடர்பான சட்டப்பூர்வ ஆவணங்களை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் தமிழக அரசு நேற்று வழங்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here