சாரிடான் உட்பட 328 மருந்து பொருட்களுக்கு தடை

191

கடந்த 2016-ம் ஆண்டு மருந்து தொழில் நுட்ப ஆலோசனை குழு பரிந்துரையின்பேரில் 349 வகையான மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதையடுத்து இந்த மருந்துகளை தயாரிக்கும் நிறுவனங்கள் தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தன.

இதை விசாரித்த நீதிபதிகள், தடை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதன்படி ஆய்வு செய்த மருத்துவ தொழில்நுட்ப குழு, 328 மருந்து பொருட்களை தடை செய்யலாம் என அறிவித்தது.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இந்த தடை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. அரசு தடை விதித்துள்ள மருந்துகளில் சாரிடான் , க்ளூகோநாம் பிஜி , டாசிம் ஏஇசட் உள்ளிட்ட புகழ்பெற்ற மருந்துகளும் உள்ளன. அதே சமயம் டி கோல்டு டோட்டல், கோரக்ஸ் உள்ளிட்ட சளி நிவாரணி மருந்துகள் தடையில் இருந்து தப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here