“இந்த குடும்பம் இனி என் குடும்பம்” : ரசிகரின் குடும்பத்திற்கு ஆதரவு அளித்த நடிகர்

556

சேலத்தில் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்த ரசிகரின் வீட்டிற்கு சென்று நடிகர் சூர்யா ஆறுதல் கூறியுள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த மணிகண்டன் என்பவர் டீக்கடையில் வேலை பார்த்து வந்தார். சூர்யா ரசிகர் மன்றத்தின் சேலம் கிழக்கு மாவட்ட தலைவராக இருந்த அவர் நுரையீரல் கோளாறால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் அவர் கடந்த 13ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

இதை கேள்விப்பட்ட நடிகர் சூர்யா சேலத்திலுள்ள மணிகண்டனின் வீட்டிற்கு தனியாக காரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். மணிகண்டனின் மனைவியிடம் மகளின் படிப்பு செலவை ஏற்றுக்கொள்வதாகவும், இந்த குடும்பம் இனி என்னுடைய குடும்பம், அனைத்து தேவைகளையும் நான் உங்களுக்கு செய்து வைக்கிறேன் என்று ஆறுதல் கூறியும், வாக்குறுதியும் கொடுத்துள்ளார்.

மணிகண்டனை இழந்துவிட்டு பெண் குழந்தையை வைத்துக் கொண்டு இனி என்ன செய்யப் போகிறோம் என்று கவலையில் இருந்த அவரின் மனைவிக்கு சூர்யாவின் வாக்குறுதி நம்பிக்கை அளித்துள்ளது. சூர்யாவின் இந்த செயல் அவர் ரசிகர்கள் மட்டும் அல்ல பிற நடிகர்களின் ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of