இன்றும்,நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்

1131

தமிழகத்தில், இன்றும், நாளையும் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருப்பூர், திண்டுக்கல், கோவை ஆகிய 7 மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் இயல்பை விட 3 முதல் 4 டிகிரி செல்சியச் வரை அதிக வெப்பநிலை உயரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று வடக்கு கடலோர மாவட்டங்களிலும் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர்ந்து காணப்படும் என்றும் அதேநேரத்தில் கடலோர மாவட்டங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் குறைய வாய்ப்புள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை மேலும் அதிகரிக்க கூடும் என்பதால், நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணிவரை வெளியில் தலைகாட்டுவதை தவிர்க்குமாறு மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது

Advertisement