இலங்கை குண்டுவெடிப்பு – தமிழகத்தை சேர்ந்த 6 பேருக்கு தொடர்பு

420

கடந்த ஏப்ரல் மாதம் 21ம் தேதி இலங்கையில் பல இடங்களில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து இன்று வரை சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இன்று இலங்கை குண்டுவெடிப்புக்கு ஆதவராக கோவையிலிருந்து சிலர் ஆதரவு குரல் எழுப்பியதால், கோவையில் இன்று தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின்போது குண்டுவெடிப்பில் தமிழகத்தை சேர்ந்த முகமது அசாருதீன், அக்ரம் சிந்தா உள்பட 6 பேருக்கு தொடர்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் இந்த சோதனையின்போது 14 செல்போன்கள், 29 சிம்கார்டுகள், 10 பென்டிரைவ், 3 லேப்டாப், 6 மெமரி கார்டு, 4 ஹார்டு டிஸ்க் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of