எனக்கு ஜவ்வு கிழியுதா? உங்களுக்கு கிழியுதா என்று பார்ப்போமா? – ஸ்டாலின் சவால்

487

8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறிய போது, முதலமைச்சர் பழனிசாமியும், பாமக நிறுவனர் ராமதாசும் எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

ஸ்ரீபெரும்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், கருணாநிதி முதலமைச்சராக இருந்த வரை தமிழகத்திற்குள் நீட் தேர்வு வரமுடியவில்லை என்றும் அதிமுக ஆட்சி வந்த பிறகு நீட் தேர்வு நுழைய விடப்பட்டதாக குற்றம் சாட்டினார்.

தான் யாரையும் அநாகரிகமாக பேச மாட்டேன் என்றும் ஆதாரத்துடன் பேசுவேன் எனவும் தெரிவித்த ஸ்டாலின், என்னை பற்றி பேசினால் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்க்கை ஜவ்வு கிழிந்து விடும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறிய போது, முதலமைச்சர் பழனிசாமியும், பாமக நிறுவனர் ராமதாசும் எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பிய ஸ்டாலின், கமிஷன் வாங்கியதே அதற்கு காரணம் என்று குற்றம் சாட்டினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of