எளிமையாக, நேர்மையாக வாழ்ந்தவர் கர்மவீரர் – காந்தியின் தனி செயலாளராக இருந்த வி.கல்யாணம் புகழாரம்

418

எளிமையாகவும், நேர்மையாகவும் வாழ்ந்தவர் கர்மவீரர் காமராஜர் என மகாத்மா காந்தியின் தனி செயலாளராக இருந்த வி.கல்யாணம் புகழாரம் சூட்டியுள்ளார்.

பெருந்தலைவர் காமராஜரின் 117-வது பிறந்த நாளையொட்டி சென்னை தி.நகரில் உள்ள காமராஜர் இல்லத்தில், காமராஜரின் அரிய புகைப்படங்கள் அடங்கிய “காமராஜர் 1000” என்ற ஆல்பத்தை மகாத்மா காந்தியின் தனி செயலாளராக இருந்த வி.கல்யாணம் வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத், காங்கிரஸ் மூத்த தலைவர் அல்போன்ஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வி.கல்யாணம், காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை ஆல்பம் போன்று வெளியிடுவதன் மூலம், மக்கள் அனைவரும் அவரின் புகழை அறிந்துகொள்ள பேருதவியாக இருக்கும் என்றார்.

அரசு செலவில், தன் வீட்டிற்கு குடிநீர் குழாய் இணைப்பு கூட வேண்டாம் என்று எளிமையாகவும், நேர்மையாகவும் வாழ்ந்தவர் கர்மவீரர் காமராஜர் என்றும் வி.கல்யாணம் புகழாரம் சூட்டினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of