கழிப்பறையையே வீடாக பயன்படுத்தி வரும் 72 வயது மூதாட்டி

260

வறுமையின் காரணமாக, 72 வயது மூதாட்டி கழிப்பறையையே வீடாக பயன்படுத்தி வந்துள்ள சம்பவம் ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

ஒடிசா மாநிலம், புவனேஷ்வரில் மயூர்பஞ்ச் மாவட்டம் கன்னிகா என்ற கிராமத்தை சேர்ந்தவர் திரெளபதி பகேரா. 72 வயதான இந்த மூதாட்டி மகள் மற்றும் பேரனுடன் வசித்து வருகிறார். இங்கு அரசு தரப்பில் கட்டப்பட்டிருந்த மிக குறுகிய அளவில் உள்ள டாய்லெட்டில் தனது உடமைகளை வைத்து வசிக்க துவங்கினார். மேலும் இந்த அறையிலேயே சமையல் செய்வதும், இரவு அங்கேயே தூங்குவதுமாக வாழ்க்கை கழித்து வருகிறார். இரவு நேரத்தில் மகளும், பேரனும் கழிவறையின் வெளியே உறங்கிக்  கொள்கின்றனர். 3 ஆண்டுகளுக்கும் மேலாக  மூதாட்டி,கழிவறையிலேயே வசித்து வந்துள்ளார்.  அரசு  வீடு கட்டித் தருமா என்ற எதிர்பார்ப்புடன் அந்த மூதாட்டி காத்துக்கொண்டிருக்கிறார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of