காலையில் நெகட்டிவ் , மதியம் பாசிட்டிவ் – மாறுபட்ட முடிவுகளால் குழப்பம்

551

தனியார் மருத்துவமனையில் டெஸ்ட் எடுத்தபோது நெகட்டிவ் – அரசு மருத்துமனையில் பாசிட்டிவ் என ரிசல்ட் வந்ததாக நெல்லையில் ஒருவர் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

நெல்லை பேட்டை பகுதியை சேர்ந்த சுப்பையா என்ற இளைஞர் கடந்த 23ஆம் தேதி முற்பகல் 11 மணி அளவில் நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் பரிசோதனை மையத்தில் பெருந்தொற்று பரிசோதனை செய்துள்ளார்.  அதில் அவருக்கு நெகட்டிவ் என்று முடிவு வந்துள்ளது.  அன்றைய தினமே மதியம் ஒரு மணி அளவில் நெல்லை பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திலும் பெருந்தொற்று  பரிசோதனை செய்தாரர்.  அதில் அவருக்கு பாசிட்டிவ் என முடிவு வந்துள்ளது. இதில் குழப்பம் அடைந்து மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அரசு சார்பில் எடுக்கப்படும் பரிசோதனை முடிவுகள் மட்டுமே கணக்கில்  எடுத்துக் கொள்ளப்படும் என பதில் அளிக்கப்பட்டிருக்கிறது. இதனால் குழப்பமடைந்த அந்த நபர், தனியார் பரிசோதனைக் கூடங்களின் தரத்தை சுகாதாரத்துறையினர் உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்திருப்பது நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisement