கேரளா முழுஅடைப்பு போராட்டத்தின் போது நிகழ்ந்த வன்முறை சம்பவங்களில் ஒருவர் உயிரிழந்தார். பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.சபரிமலைக்கு 50 வயதுக்கு உட்பட்ட இரண்டு பெண்கள் சென்றதை அடுத்து அங்கு மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. பெண்கள் கோவிலுக்குள் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் நேற்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தின் போது பல இடங்களில் வன்முறை வெடித்தது. பந்தளம் பகுதியில் நடத்தப்பட்ட கல்வீச்சு தாக்குதலில் பா.ஜ.க தொண்டர் ஒருவர் உயிரிழந்தார். திருச்சூரில் பா.ஜ.க தொண்டர்கள் மூன்று பேர் கத்திகுத்து பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதால் ஏராளமான பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்தன. இதனால் சபரிமலை விவகாரத்தால் கேரளாவில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.