கொரோனா தடுப்பூசிகள் எப்படித் தயாரிக்கப்படுகிறது?

541

தடுப்பூசிகள் எப்படித் தயாரிக்கப்படுகிறது?

கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரே ஆயுதமாகத் தற்போது தடுப்பூசிகள்தான் உள்ளது- இந்தியாவில் 8க்கும் அதிகமான தடுப்பூசிகள் தயாரிக்கப்படுகிறது- இதில், குறிப்பிடத்தக்கது கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகியவைதான்.

இந்தத் தடுப்பூசிகள் எப்படித் தயாரிக்கப்படுகிறது என்பதைப் பார்ப்போம்…..

பொதுவாக, தடுப்பூசிகள் நான்கு முறைகளில் தயார்செய்யப்படுகிறது-

  1. WHOLE VIRUS
What are whole virus vaccines and how could they be used against COVID-19?  | Gavi, the Vaccine Alliance
WHOLE VIRUS

 இது மிகப்பழமையான முறை. இந்த முறையில், உயிருள்ள வைரஸை எடுத்து செயலிழக்கச் செய்வார்கள். செயலிழந்த அல்லது உயிரற்ற இந்த வைரஸை (DEAD VIRUS OR ATTENUATED) விஞ்ஞானிகள் மனித உடலுக்குள் செலுத்துவார்கள். அப்போது நம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பாற்றல் (ANTIBODIES) உயிரற்ற வைரஸை (DEAD CORONA VIRUS) உயிருள்ளதாகவே கருதி, நோயெதிர்ப்பு சக்தியை அதிகமாக உருவாக்கும்.

இந்த முறையில் தயாரிக்கப்பட்டதுதான் கோவேக்சின்.

  • VIRAL VECTOR
What are viral vector-based vaccines and how could they be used against  COVID-19? | Gavi, the Vaccine Alliance
viral vector

இது ஒரு நுட்பமான முறை. இம்முறையில் கொரோனா வைரஸின் DNAவை எடுத்து சாதாரண சளியை ஏற்படுத்தும் ANDENO VIRUSடன் ஒட்டிவைத்துவிடுவார்கள். இங்கே ANDENO வைரஸ் என்பது ஒரு கூரியர் பையன் மாதிரி செயல்படும். கூரியர் பையன், ‘’சார் பார்சல் உங்களுக்குப் பார்சல் வந்திருக்கு’’ன்னு சொல்றமாதிரி, இந்த கொரோனா டிஎன்ஏவை உடலுக்குள் கொண்டுசென்று டிஎன்ஏ வந்திருக்கு சார் எனத் தெரிவிக்கும்.

உடனே கொரோனா டிஎன்ஏ மாதிரியே உடலுக்குள் புதுசா முள் மாதிரி அமைப்பு ஏற்படும். இந்தப் புது முள்ளை எதிர்கொள்ள நோய் எதிர்ப்பான்கள் பயிற்சி மேற்கொள்ளும். இந்தப் பயிற்சிக்குப் பிறகு, உண்மையான முள் போன்ற அமைப்புடன் கொரோனா வைரஸ் வந்தால், தான் ஏற்கெனவே எடுத்துக்கொண்ட பயிற்சியால், அவற்றுக்கு முட்டுக்கட்டை போடும்.

இந்த முறையில் தயாரிக்கப்பட்டதுதான் கோவிஷீல்டு, ஸ்புட்னிக்

  • Mrna VACCINE
Behind the Science: what is an mRNA Vaccine? | Pfizer UK
Mrna VACCINE

இதுவும் மிகப்பழமையான முறைதான். அதேசமயம், கடினமான தொழில்நுட்பத்துடன் கொண்டது- இந்த முறையில், கொரோனா வைரசின் mRNAவைத் தனியே எடுப்பார்கள். இங்கே எம் என்பது ஒரு தூதுவர் மாதிரி. ஆர்என்ஏ என்பது உத்தரவிடும் அதிகாரி போன்றது- mRNA நம் உடலுக்குள் சென்றதும், நம் உடலிலுள்ள செல்களுக்கு கட்டளை இடும். கொரோனா முள் அமைப்பைப் போன்ற SPIKE PROTEINஐ ஏற்படுத்தும். இந்த ஸ்பைக் புரதம் கொரோனாவை திறம்பட எதிர்கொண்டு வீழ்த்தும்.

இம்முறையில் தயாரிக்கப்படுவதுதான் PFIZER. MODERNA

  • PROTEIN SUBUNIT VIRUS
What are protein subunit vaccines and how could they be used against  COVID-19? | Gavi, the Vaccine Alliance
PROTEIN SUB UNIT VIRUS

இந்த முறைத் தடுப்பூசித் தயாரிப்பில் SPIKE PROTEINஐ மட்டும் பிரித்தெடுத்து நம் உடலில் செலுத்துவார்கள். உடனே, இதனை எதிர்கொள்ளும்விதமாக உடலே தன்னைத் தயார்படுத்திக்கொள்ளும். இம்முறையில் மருந்து தயாரிப்புக்கு பூஸ்டர் தேவைப்படும்.

இதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்டதுதான் NOVAVAX, EPIVAC. SanofiGSK.

சந்தோஷம்தானே…..இனி, தைரியமா தடுப்பூசி போட்டுக்கங்க…. கொரோனாவுலருந்து விடுபடுங்க….
ஆரோக்கியமா வாழுங்க..

Advertisement