இந்தியாவின் முன்னாள் பிரதமரும் சமூகநீதி காவலருமான வி.பி.சிங் மறைவு தினத்தை முன்னிட்டு, அவரது அரசியல் பயணத்தை பார்ப்போம்….

இருபதாம் நூற்றாண்டில் மக்களின் வாழ்வாதாரத்திற்கு அரணாக திகழ்ந்த சமூக நீதி காவலர் வி.பி.சிங், 1939 ஆம் ஆண்டு மன்னர் வம்சாவளியில் பிறந்தார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து மக்கள் பணியை தொடங்கினார், 1969-ல் உத்தரபிரதேச சட்டமன்ற உறுப்பினரானார். 1971 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டார், 1974 ஆம் ஆண்டு மத்திய அமைச்சரவையில் வர்த்தக துறை இணை அமைச்சாராக பணியாற்றினார். 1976 ஆம் ஆண்டு இந்தியாவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது, நாட்டில் கள்ளச் சந்தையை தடுத்து நிறுத்திய பெருமை வி.பி.சிங்குக்கு உண்டு.

1980 ஆம் ஆண்டு உத்திர பிரதேச மாநில முதல்வரானார். 1984 ஆம் ஆண்டு மத்திய நிதி அமைச்சராக பொறுப்பு வகித்த வி.பி.சிங், நாட்டில் அதிகாரவர்க்கங்களை பயன்படுத்தி தொழில் நடத்திய அம்பானி, அதானி நிறுவணங்களில் வருமான வரி சோதனை நடத்தி, கார்ப்பரேட் நிறுவனங்களை கதிகலங்க வைத்தார். பின்னர் பாதுகாப்புத் துறைக்கு மாற்றப்பட்ட வி.பி.சிங், தனது நிர்வாக ஆளுமையால் போஸ்கோ பீரங்கி ஊழலை கண்டுபிடித்தார். அரசின் மீது களங்கம் வந்ததால், தான் வகித்து வந்த அமைச்சர் பதவியையும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்து, தான் எந்த சூழ்நிலையிலும் சமரசம் இல்லா போராளி என்பதை நாட்டுக்கு எடுத்துரைத்தார்.

1989 ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக வி.பி. சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார், 1990 ல் அத்வானி நடத்திய ரதயாத்திரையால் இந்திய இறையாண்மைக்கும், மதசார்பின்மைக்கும் குந்தகம் ஏற்படும் நிலை உருவானதால் அத்வானியை கைது செய்ய உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து தேசிய முன்னணி கூட்டணியில் இருந்து பா.ஜ.க. வெளியேறியதால் வி.பி. சிங் அரசு கவிழ்ந்தது, இந்திய பிரதமராக வி.பி.சிங் பதவி வகித்த காலம் வெறும் 11 மாதங்கள் தான் என்றாலும், அவர் சமூக நீதியின் காவலராக திகழ்ந்தார். திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோருடன் மிகவும் நெருக்கமாக இருந்தார்.

இதனால் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீத இடஒதுக்கிடு கிடைக்க வழி செய்தார். மன்னர் குடும்பத்தில் பிறந்து, இந்தியாவின் சமூக நீதி காவலனாக அரசியல் பயணத்தை நடத்திய வி.பி. சிங் 2008 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் நாள் உடல் நலக்குறைவால் காலமானார், இந்திய வரலாற்றில் கண்டிராத ஒரு தலைவராக, அமைச்சராக, பிரதமராக, மதச்சார்பின்மையை காத்த சமூக நீதி காவலராக திகழ்ந்த வி.பி. சிங்கை இந்நாளில் நினைவுகூர்வது நமக்கு கடமை.

– எம்.ஜாபர் சாதிக்

 

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of