சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்  இழப்புக்கு 400 ரன்களை கடந்து விளையாடி வருகிறது.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். தொடக்க வீரர் அகர்வால் 77 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி, இன்று 2வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடி வருகிறது. நேற்று சதம் அடித்த புஜரா தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். சற்று முன்வரை இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 417 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

 

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of