செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர் | NASA Helicopter

1776

செவ்வாய் கிரகத்தில் அமெரிக்காவின் நாசா அனுப்பிய ஹெலிகாப்டர் வெற்றிகரமாக பறந்ததை அடுத்து விண்வெளி துறையில் அமெரிக்கா மீண்டும் ஒரு வரலாற்று சாதனை படைத்துள்ளது.

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாக நாசா, கடந்த ஆண்டு பெர்சவரன்ஸ் ரோவரை அனுப்பியது. கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய பெர்சவரன்ஸ் ரோவர், செவ்வாய் கிரகத்தை படம் பிடித்து பூமிக்கு அனுப்பியது.

மேலும், மண் துகள்கள் உள்ளிட்ட மாதிரிகளையும் சேகரித்து வருகிறது. பெர்சவரன்ஸ் ரோவருடன் சிறிய அளவிலான ஹெலிகாப்டர் ஒன்றும் இணைத்து அனுப்பப்பட்டது.

Ingenuity என பெயரிடப்பட்டுள்ள சிறிய ரக ஹெலிகாப்டர், செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்ததாக நாசா அறிவித்துள்ளது.

இதன்மூலம், பூமியை தவிர மற்றொரு கிரகத்தில் முதன்முதலாக ஹெலிகாப்டரை இயக்கி நாசா மீண்டும் ஒரு வரலாற்று சாதனையை படைத்துள்ளது.

Advertisement