ஜெ நினைவிடத்தில் கருப்பு சட்டை அணிந்து முதல்வர், துணை முதல்வர் மலரஞ்சலி

820

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 2 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, முதல்வர், துணை முதல்வர் மற்றும் அதிமுகவினர் சென்னை அண்ணா சாலையில் இருந்து அமைதி பேரணியாக சென்று ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினர்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 2ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு, அதிமுக சார்பில் சென்னை அண்ணா சாலையில் இருந்து, காமராஜர் சாலையில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் நோக்கி அமைதி பேரணி நடைபெற்றது.

இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக MP,MLA-க்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கருப்பு நிற சட்டை அணிந்து பங்கேற்றனர்.

தொடர்ந்து, பேரணியாக சென்ற அவர்கள் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதனை முன்னிட்டு அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of