“தாய்ப்பாலுக்கு நிகர் ஏதும் இல்லை“ என்பதற்கான மருத்துவ பயன்கள்..!

382

 

“ தாய்ப்பாலுக்கு நிகர் ஏதும் இல்லை ”என்பது நமக்கு தெரிந்த ஒன்றுதான்.  அதே தாய்ப்பாலை மார்பகத்தில் இருந்து நேரடியாக கொடுக்காமல், பிடித்துவைத்து புட்டியில் குடிக்கும் நகர்ப்புறக் குழந்தைகள் இப்போது அதிகமாகிவிட்டது. 

இதற்கு வழியே இல்லாதபோது, பால் புட்டி சிறந்த மாற்றாகக் கருதப்பட்டாலும், தாயின் மார்போடு அணைந்து, நேராக பால் அருந்துவதற்கு இந்த புட்டி இணையாகாது. ஆனால், நேராக தாய்ப்பால் அருந்தும் குழந்தைக்குக் கிடைக்கும் கூடுதல் மருத்துவப்பயன் இதில் கிடைப்பதில்லை. Image result for தாய்ப்பால்

ஏனென்றால் பச்சிளம் குழந்தையின் வாயில், உமிழ் நீரில் இருக்கும் கிருமித்தொற்றை, அந்தக்குழந்தை பால் அருந்தும்போது, தாயின் உடல் உணர்ந்துகொண்டு, உடனடியாக அந்தக் கிருமிக்கு எதிரான ஆன்டிபாடிகளை ஒரு சில மணித்துளிகளில் தன் உடம்பில் தயாரித்து, பிறகு அடுத்த வேளை பால் ஊட்டும் போது, தாய்ப்பாலுடன் கலந்து தந்துவிடுமாம். 

இவ்வளவு விரைவாக தாய், தன் நோய் எதிர்ப்பு ஆற்றலை குழந்தைக்கு அளிப்பதை ஆய்வில் பதிந்து, வியப்புடன் கூறுகிறார்கள் ஆய்வாளர்கள்.  இதுவே தாய்ப்பாலை புட்டியில் பிடித்துவைத்து கொடுக்கும்போது ஆன்டிபாடிகள் குழந்தைக்கு கிடைப்பதில்லை. Image result for தாய்ப்பால்

ஆனால் தாய்ப்பால் சுரப்பு, தாயின் மார்பு காம்பை உறிஞ்சும்போது மட்டுமே இந்த ஆன்டிபாடிகள்  குழந்தையின் வாய்க்கு வரும்.  ஆனால் புட்டி பாலை குடிக்கும்போது, பாலை உறிஞ்சாமல் இருந்தாலும், அது வழிந்து வாயில் நிரம்பி, சில நேரங்களில் மூச்சுக்குழலுக்குள் செல்லவும்கூட வாய்ப்பு உண்டு.  இன்னொரு விஷயம் என்னவென்றால், தாய்ப்பால் ஊட்டும்போது தான் குழந்தையின் மகிழ்வும், நிறைவும் தாயின் கண்ணுக்கு தெரியும். Image result for தாய்ப்பால்

ஆனால் எந்த அளவு குழந்தை பால் குடிக்கிறது என்று தாயால் கணக்கிடமுடியாது. குழந்தையை பராமரிப்பவர் புட்டியில் பிடித்துவைத்த பாலை தாய்ப்பால் வீணாகக்கூடாது என புட்டி காலியாகும் வரை கொடுப்பார்கள்.  ஆனால் அது பின்னாளில் குழந்தை தேவைக்கு அதிகமாய் உண்ணும் பழக்கம் உடையவர்களாக மாறிவிடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றனர். à®¤à®¾à®¯à¯à®ªà¯à®ªà®¾à®²à¯à®•à¯à®•à¯ நிகர் ஏதும் இல்லை என்பதற்கான காரணங்கள்....

தாய்ப்பாலை புட்டியில் பீச்சும் தாய்க்கு மீண்டும் பால்சுரப்பு ஏற்படுவது, இயல்பாக குழந்தை பால் அருந்தும் போது சுரப்பது போல சீராக நடைபெறாது.  இதனால் புட்டியை தவிர்த்துவிட்டு, தாய்ப்பாலை நேரடியாக ஊட்டினால் குழந்தைக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of