திமுக-பாமக கூட்டணி அமைந்தால் விசிக நீடிக்குமா? – திருமா அதிரடி பதில்

101
thirumavalavan

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனியார் செய்தி இதழுக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியில் பாஜக-வை போன்று  பாமக ஒரு சனாதன கட்சி என கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும் பாமக திமுக வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர்,

அது உண்மையாக இருக்கலாம். பா.ம.க.வுக்கு இது வாடிக்கைதான். அவர்கள் அரசியல் ஆதாயத்திற்காக கொஞ்சம்கூட கூச்சப்படாமல் எதையும் செய்வார்கள்.

பாமக, அதிமுக வுடனான பேரத்தில் அதிமுக அடிபணியாததால் திமுக வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதை போன்று நாடகமாடுகின்றனர் என தெரிவித்தார். தமிழகத்தில் பாமக ஆட்சி அமைப்பதற்கு திமுக தான் முட்டுக்கட்டையாக உள்ளது.எனவே பாமக,  திமுக வை தான் எதிரியாக பார்க்கின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியை எதிரியாக பார்க்கவில்லையென தெரிவித்தார்.

திமுகவுடன் பாமக கூட்டணி வைத்தால் விடுதலை சிறுத்தைகள் கட்சி அந்த கூட்டணியில் நீடிக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்;

இதுகுறித்து ஏற்கனவே பலமுறை தெளிவு படுத்தி இருக்கிறோம். பா.ம.க. ஒரு சனாதன கட்சி. அதற்கும், பா.ஜனதாவுக்கும் வேறுபாடு இல்லை. சாதி கலவரங்களையோ, மத கலவரங்களையோ தூண்டி விட்டு ஈவு இரக்கமின்றி அப்பாவி மக்களை பலி கொடுத்து அரசியல் ஆதாயம் தேடுவதில் குறியாக இருப்பவர்கள்.எனவே பாஜக, பாமக இருக்கும் அணியில் ஒருபோதும் விசிக சேராது. அந்த கொள்கையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என தெரிவித்தார்.