தொடரும் தாக்குதல், மேலும் ஐவர் உயிரிழப்பு | America Troops | Taliban

291

அண்மையில் பயங்கரவாத செயல்களை கைவிடுவதாக தலிபான் அமைப்பு தெரிவித்ததிலிருந்து அது தொடர்பாக தலிபான்களுடன் அமெரிக்கா நடத்தி வந்த பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியது. மேலும் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த அமெரிக்க படைகளில் சுமார் 5000 வீரர்களை திரும்ப பெறுவதாக தகவல்கள் வெளியானது. இது ஒருபுறமிருக்க ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்களும் அங்கு நடந்தவண்ணம் உள்ளன.

அவ்வகையில் இன்று காபூல் நகரில் பல்வேறு முக்கிய அலுவலகங்கள் அமைந்துள்ள ஷாஷ் தரக் பகுதியில் இன்று சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இந்த தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் என மொத்தம் 25 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.