தோழியை திருமணம் செய்த நண்பி

371

இரண்டு பெண்களும் மேஜர் என்பதால் ஒருவரையொருவர் காதலித்து திருமணம் செய்துள்ளது அவர்களின் உரிமை என நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளதற்கு அவர்களின் பெற்றோர் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.
ஹரியானா மாநிலம் குர்கிராம்மிற்கு உட்பட்ட பட்டாவுடி என்ற பகுதியை சேர்ந்த 20 வயது பெண்னும் ஒவர் ஜாஜ்ஜர் என்ற பகுதியைச் சேர்ந்த 19 வயது பெண்ணும் பள்ளி பருவம் முதல் ஒரே பள்ளியில் படித்த வந்த நிலையில் நட்புடன் இருவரும் பழகி வந்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த இருவருக்குள்ளும் காதல் மலர்ந்துள்ளதாகவும், நாங்கள் ஒருவரையொருவர் திருமணம் செய்துக்கொள்ளப்போவதாக அவர்களின் பெற்றோர்களிடம் கூறியதும். அவர்கள், பதைபதைத்துப் போனார்கள். நீங்கள் இருவரும் பெண்கள் என்றும் காதலித்து இருவரும் திருமணம் செய்துக்கொள்ளவதை இந்த சமூதாயம் ஏற்றுக்கொள்ளுமா? என பலவகையில் அறிவுரை கூறியுள்ளனர்.


இதனிடையே 20 வயது பெண் கடந்த சில நாட்களுக்கு முன் காணவில்லை என அந்த பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் தந்ததையடுத்து அவர்களை தீவிரமாக தேடிய காவல் துறையினர் இருவரும் சோக்னா என்ற பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்ததாகவும், இதில் 20 வயது பெண் மனைவியாகும், ஜாஜ்ஜர் பகுதியை சேர்ந்த பெண் கணவனாகவும் வாழ்ந்து வரும் நிலையில், அவர்களை கோர்ட்டில் ஒப்படைத்தனர்.
அப்போது, இரு பெண்களும் 18 வயதை கடந்தவர்கள் என்றும் அவர்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்வதும் வாழாததும் அவர்களின் உரிமை என்று கோர்ட், கூறியுள்ளது. இதனிடையே, மேலும், அந்த பெண்களின் பெற்றோர்கள் பேசி பார்த்தும், அவர்கள் வர மறுத்ததால் அவர்களின் பெற்றோர் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.

Advertisement