அரியலூர் மாவட்டம், மலத்தான்குளத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது.இந்த போட்டியில் திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து அலங்கரித்து  கொண்டு வரப்பட்ட காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. சீற்ப்பாய்ந்த காளைகளை கட்டித் தழுவ 300 மாடுபிடி வீரர்கள் களத்தில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து போட்டியில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். அசம்பாவதிங்கள் நடைபெறாமல் தடுக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of