தமிழக சட்டப்பேரவையில் மறைந்த தலைவர்களான முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உள்ளிட்டோருக்கு  இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

தமிழக சட்டப்பேரவை இன்று கூடியதும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி , தமிழக முன்னாள் ஆளுநர் பீஷ்ம நாராயண்சிங், மக்களவை முன்னாள் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி மற்றும் ஐராவதம் மகாதேவன், நெல் ஜெயராமன் , மருத்துவர் எஸ். ஜெயச்சந்திரன் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கஜா புயலின் போது உயிரிழந்தவர்களுக்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு இரங்கல் குறிப்பை வாசித்த துணை முதலமைச்சர்  ஓ.பன்னீர் செல்வம், மன உறுதியும், தன்னம்பிக்கையும் தன்னகத்தே கொண்ட தலைவர், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என்றும், கட்சியிலும், ஆட்சியிலும் உறுதியாக செயல்பட்டவர் கருணாநிதி எனவும் தெரிவித்தார். வாழ்ந்த 95 ஆண்டுகளில் 80 ஆண்டுகள் மக்களுக்காக உழைத்தவர் என்றும், பேச்சாற்றல் மூலம் அனைத்து தரப்பினரையும் கவர்ந்திழுத்தவர் கருணாநி என்றும் புகழாரம் சூட்டினார். நெருக்கடி காலத்தில் திறமையாக செயல்பட்டவர் என்றும், ஒரே வார்த்தையில் அவையை கலகலப்பாக்கக்கூடியவர் எனவும் ஓ.பன்னீர்செல்வம்  குறிப்பிட்டார். பேச்சாற்றல் மூலம் அனைத்து தரப்பினரையும் கவர்ந்திழுத்தவர் கருணாநிதி என்று கூறிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கருணாநிதியின் ஒவ்வொரு குணநலன்களையும் ஒவ்வொரு கோணத்திலும் பாராட்டலாம் என தெரிவித்தார்.

Advertisement