ரபேலில் ”அபேஸ்” – அம்பானிக்கும் – பிரான்சுக்கும் இடைத்தரகர் மோடி – ராகுல் காட்டம்

721

ரபேல் ஒப்பந்தத்தில் மோடி அம்பானிக்கும் பிரான்ஸுக்கும் இடைத்தரகர் போல் செயல்பட்டுள்ளார் என ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

ரபேல் ஒப்பந்த ஊழல் விவகாரம்  தொடர்பாக நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. இந்த ஊழல் தொடர்பாக புதிய ஆவணங்களை வெளியிட்டு, பாஜக மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தார். ரபேல் ஒப்பந்தம் குறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர்;

இந்த முறை சிஏஜி அறிக்கை தொடங்கி அனில் அம்பானி வரை பல விஷயங்கள் குறித்து ராகுல் பேசினார்.

 

ராகுல் தனது பேட்டியில், ரபேலில் பிரதமர் மோடி இடைத்தரகராக செயல்பட்டு இருக்கிறார். அனில் அம்பானிக்காக மோடி சட்டங்களை வளைத்திருக்கிறார். அனில் அம்பானிக்கு ரபேல் ஒப்பந்தம் நடந்தது எப்படி தெரியும்? ஒரு ராணுவ ஒப்பந்தம் யார் சொல்லி அனில் அம்பானிக்கு தெரிந்தது.

திருடருக்கு திருடர் செய்த திருட்டு அறிக்கைதான் இந்த சிஏஜி அறிக்கை. இது உச்ச நீதிமன்றத்தில் நிரூபணம் ஆகும். இது மோடியே சுயமாக எழுதிய அறிக்கையாகும்.

ரபேல் திருட்டுக்கு மோடிதான் முழு பொறுப்பாவார். அவர் ஒரு உளவாளி போல செயல்பட்டு ராணுவ ரகசியத்தை அனில் அம்பானியிடம் கொடுத்திருக்கிறார். ரபேல் ஒப்பந்தம் நடப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பே அனில் அம்பானிக்கு தெரிந்து இருக்கிறது. இதுகுறித்து அம்பானி பிரான்ஸ் அதிகாரிகளிடம் பேசியுள்ளார்.

எப்படி பிரான்ஸ் அதிகாரிகளிடம், தனக்குத்தான் ரபேல் ஒப்பந்தம் கிடைக்கும் என்று கூறி இருக்கிறார். ஏர்பஸ் அதிகாரி ஒருவரின் மெயில் இதை நிரூபிக்கிறது. இதுதான் அந்த மெயிலின் ஜெராக்ஸ் (ஆவணங்களை காட்டினார்). அப்படியென்றால் இந்த ஒப்பந்தம் குறித்து அனில் அம்பானிக்கு முன்பே தெரிந்துள்ளது.

இப்போது சொல்லுங்கள், இது எப்படி அவருக்கு தெரியும்? பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கூட ரபேல் ஒப்பந்தம் குறித்து தெரியாது. அம்பானிக்கு எப்படி தெரிந்தது. இது உண்மை என்றால் மோடிதான் இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும். இதற்கு பின் அவர்தான் இருக்கிறார். இதனால் மோடி மீது தேசதுரோக வழக்கை தொடர்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறினார்.

Advertisement