வரி ஏய்ப்பு தொடர்பாக சரவண பவன், அஞ்சப்பர் உள்ளிட்ட 4 உணவகங்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

சரவணபவன், அஞ்சப்பர், கிராண்ட் சுவிட்ஸ் மற்றும் ஹாட் பிரட்ஸ் ஆகிய உணவகங்கள், விற்பனையை குறைத்துக் காட்டி வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்துள்ளதாக புகார் எழுந்தது.

இந்த புகாரை அடுத்து 4 உணவகங்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நேற்று காலை தொடங்கிய சோதனை இரவு முழுவதும் விடிய விடிய நடைபெற்றது. இந்த சோதனை இன்று மாலை வரை நீடிக்கும் என வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of