வாக்களிக்க இலவச வாகன சேவை….

1182

தேர்தல் நாளன்று முதியோர், மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு ஏதுவாக இலவச வாகன சேவைக்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நாளை காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடக்கிறது. இந்தத் தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் தபால் வாக்குப் பதிவு செய்யலாம் என முதன்முறையாக தபால் வாக்கு முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆனாலும், தபால் வாக்கு செலுத்தாமல் நேரடியாக வாக்குச்சாவடிக்குச் செல்ல விரும்பும் வாக்காளர்கள் தங்கள் இல்லத்திலிருந்து வாக்குச்சாவடிக்குச் சென்றுவர ஊபர் நிறுவனம் இலவச சேவை வழங்குவதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு வெளியிட்ட செய்திக்குறிப்பில், இலவச வாகன சேவையை சென்னை, திருச்சி, கோவை  ஆகிய நகரங்களில் ஊபர் நிறுவனம் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதியோர் மற்றும்  மாற்றுத்திறனாளி வாக்காளர்கள், வீட்டிலிருந்து வாக்குச்சாவடிக்குச் சென்று திரும்பும் வகையில்,  குறைந்தபட்சம் 5 கிலோ மீட்டர் தூரத்திற்குட்பட்டு இலவச வாகன சேவை வழங்கப்படும் என்றும் சவாரி செய்வோர் கைப்பேசியின் மூலம் “ஊபர்” செயலி (Uber App) வழியாக இலவச சவாரிக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. 

Advertisement