மதுரையில் வீட்டை காலி செய்ய சிறுமிக்கு மின்சாரம் பாய்ச்சிய வீட்டு உரிமையாளரின் மகனை போலீசார் கைது செய்தனர்.

கணேஷ் குமார் என்பவர் சிம்மக்கல் பேச்சியம்மன் பகுதியில் தனது மனைவி மற்றும் மகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர் கடந்த மூன்று மாதமாக வீட்டு வாடகை கொடுக்காததால், வீட்டை காலி செய்யுமாறு வீட்டின் உரிமையாளர் மணிவண்ணன் வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில்  வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கணேஷ்குமாரின் 7 வயது மகளுக்கு, வீட்டு உரிமையாளரின் மகன் சந்தோஷ் ராஜ்  மின்சாரம் செலுத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த சிறுமி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுமியின் உடலில் மின்சாரம் பாய்ச்சிய சந்தோஷ் ராஜ்ஜை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of