ஒரே நாளில் ஒரு கோடி பறிமுதல் – தேர்தல் அதிரப்படையினர் நடவடிக்கை

78

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நேற்று திருவாரூரில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட 50 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே முறையான ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்பட்ட 20 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

மாவட்டத்தில் இருவேறு இடங்களில் நடந்த வாகன சோதனையில் 5 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் லோகநாதன் என்பவரிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.சேலம் திருவாக் கவுண்டனூர் பைபாஸ் சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் 3 லட்சம் ரூபாயை கைப்பற்றினர்.

வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டையில் பள்ளிகொண்டா சார் பதிவாளர் மணிகண்டனின் காரில் இருந்து கணக்கில் வராத இரண்டரை லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.