தடையை மீறினால் ஒரு கோடி ரூபாய் அபராதம்

377

இயற்கை வளங்களையும், உயிரினங்களையும் பாதுகாப்பதற்கு ஏதுவாக ‘ப்ரி வில்லி’ என்ற புதிய சட்டம் குறித்த மசோதா கனடா நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த சட்டத்தின்படி தனி நபர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் யாரும் திமிங்கலங்கள் மற்றும் டால்பீன்களை பிடிப்பதற்கு தடை விதிக்க வலியுறுத்தப்பட்டது. இந்த சட்டம் இப்போது அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டம் உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதனை மீறுபவர்கள் இந்திய மதிப்பில் ரூ.1 கோடி அபராதம் செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில் விலங்குகள், உயிரினங்களுக்கான பீட்டா அமைப்பு இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டி போராட்டம் நடத்தி இருந்தது. இதன் விளைவாக இறுதியாக இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of