மேற்கு வங்காளத்தில் குண்டுவெடிப்பு: 8 வயது குழந்தை பலி

569

கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் டம்டம் நகர் அமைந்துள்ளது. இங்குள்ள நாகெர்பஜார் பகுதி இன்று காலை திடீரென குண்டு வெடித்தது. இந்த சம்பத்தில் 8 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக ஆர் ஜி கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அலுவலகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பு எனது எதிராளிகளால் நன்றாக திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. என் மீது இலக்கு வைத்தே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது என தெற்கு டம்டம் நகராட்சி தலைவர் பஞ்சு கோபால் ராய் கூறியுள்ளார்.

இதனிடையே குண்டு வெடிப்பு குறித்து தகவலறிந்ததும் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை நடத்தினர். மேலும் மேற்கு வங்காள குற்றவியல் புலனாய்வுத்துறை பிரிவினர் குண்டு வெடிப்பு தாக்குதல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement