1 லட்சம் வீடியோக்கள்..! 17 ஆயிரம் சேனல்கள்..! அதிரடியாக நீக்கிய YouTube..!

1718

தொழில்நுட்பம் என்பது உலகை விரல் நுனிக்கு கொண்டு வரும் அளவிற்கு அசுர வளர்ச்சி அடைந்துள்ளது.

இந்த வளர்ச்சியின் காரணமாக ஒரு பக்கம் பல்வேறு நன்மைகள் இருந்தாளும், மறுபக்கம் சிலர் தவறான விஷயங்களுக்காக தொழில்நுட்பங்களை பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில் உலகின் முன்னணி வீடியோ தளமான யு-டுயூப், வெறுப்புணர்வைத் துண்டும் வகையிலான வீடியோக்களை நீக்கியுள்ளது.

இதுகுறித்து அறிக்கை அளித்துள்ள கூகுள் நிறுவனம், மதம், சாதி, பாலினம், நிறம் ஆகியவற்றுக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலான 1 லட்சம் வீடியோக்களையும், 17 ஆயிரம் சேனல்களையும், 500 மில்லியன் கமெண்ட்களையும் யூடியூபிலிருந்து நீக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், இது கடந்த ஆண்டை விட 5 மடங்கு அதிகமாகும்.

Advertisement