10 ஆயிரம் கோடி மதிப்பில் புதிய தொழில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது

399

தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் சுமார் 10 ஆயிரம் கோடிரூபாய் மதிப்பீட்டில் புதிய தொழில்களை தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது.

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று தொழில்துறை சார்பாக புதிய தொழில்களை தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கோயமுத்தூர், விழுப்புரம் மற்றும் ஈரோடு ஆகிய 8 மாவட்டங்களில் தொடங்க உள்ள தொழில்நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்தி்ட்டார்.

இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்,  தலைமைச்செயலாளர் சண்முகம் உள்ளிட்ட உயரதிகாரிகள், மற்றும்  தொழில்நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முதலமைச்சர் முன்னிலையில்,  காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் தொழிற்பூங்கா, விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 36 கோடிரூபாய் மதிப்பீட்டில் முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலை, செங்கல்பட்டுமாவட்டம் சிங்கபெருமாள் கோவில் – ஒரகடம் சாலையில் நான்காயிரம் கோடிரூபாய் மதிப்பீட்டில் தகவல் தரவு மையம்,  என மொத்தம் எட்டு திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

10 ஆயிரத்து 399 கோடிரூபாய் மதிப்பீட்டில் உருவாகும் இந்த புதிய தொழில்திட்டங்கள் மூலம், 13 ஆயிரத்து 307 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.