தேடுதல் வேட்டை – கொல்லப்பட்ட 10 ஐ.எஸ் பயங்கரவாதிகள் | Afghanistan

327

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளை அழிக்கும் நோக்கில் அந்நாட்டு அரசுப்படையினர் மற்றும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுபடையினர் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இதனால் பயங்கரவாத குழுக்களுக்கும் பாதுகாப்புபடையினருக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கிழக்கு நன்கர்ஹார் மாகாணத்தில் உள்ள அச்சின் மாவட்டத்தில் அரசு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் கடந்த 24 நேரத்திற்குள் 10 ஐ.எஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர்களிடம் இருந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அவர்களது மறைவிடங்கள், பதுங்கு குழிகள் மற்றும் கட்டுப்பாடு மையங்களை பாதுகாப்புப் படையினர் அழித்துள்ளதாகவும், இரண்டு கண்ணிவெடிகளையும் கண்டுபிடித்து செயலிழக்கச் செய்ததாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement