காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு!!!

274

வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. அதிமுக தனது கூட்டணி கட்சிகள் குறித்து வெளியிட்டுள்ளது.

திமுக கட்சி கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் கட்சியிடம் தொகுதிப் பங்கீடு தொடர்பாக அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக கூட்டம் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், பேசியது பின்வருமாறு:-

“மக்களவைத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 9 தொகுதியும், புதுச்சேரியில் 1 தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எந்த தொகுதிகள் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஓட்டலில் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. வெளிப்படையாக அறிவித்துள்ளோம்.தோழமை கட்சிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்துவோம். தேமுதிக-வுடன் கூட்டணி குறித்து எந்த பேச்சுவார்த்தை நடத்தவில்லை. வரும் காலங்களில் தோழமைக் கட்சிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவோம்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உடன் காங்கிரஸ் கட்சி பொதுச்செயாலளர் வேணுகோபால் உட்பட முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.