தந்தையை விட வயதில் மூத்தவருடன் 10 வயது சிறுமிக்கு திருமணம்..! தந்தையே செய்த கொடூரம்..! அதிர்ச்சி காரணம்..!

686

சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வெளியாகி வைரலாக பரவி வந்தது. அந்த வீடியோவில், ஒரு சிறுமிக்கு, தனது தந்தை வயதில் உள்ள ஒரு நபருடன் திருமணம் நடைபெற்றது. இந்த வீடியோ வைரலானதைத்தொடர்ந்து, இதுகுறித்து போலீசாரின் கவனத்திற்கு சென்று விசாரணை நடத்தப்பட்டது.

இதில், 10-வயது நிரம்பியுள்ள அந்த சிறுமி, குஜராத் மாநிலம் பனஸ்கந்தாவைச் சேர்ந்தவர் என்பதும், தனது தந்தையின் மூலம் ரூபாய் 1 லட்சத்திற்கு 50 ஆயிரத்திற்கு திருமணத்திற்காக விற்கப்பட்டுள்ளார் என்பதும் தெரியவந்தது.

மேலும், திருமணத்திற்கு முன்பாக 50 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டதாகவும், திருமணத்திற்கு பிறகு 1 லட்சம் தர இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது. இதில் இன்னும் அதிர்ச்சியடைக்கூடிய செய்தி என்னவென்றால், அந்த சிறுமியை திருமணம் செய்தவர், சிறுமியின் தந்தையை விட வயதில் மூத்தவர்.

இதையடுத்து, அந்த சிறுமியை திருமணம் செய்த கோவிந்த் தாகூர் மற்றும் அவரது தந்தை, மற்றும் இந்த திருமணத்திற்கு முக்கிய காரணமாக இருந்த தரகர் ஒருவர் என 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், திருமணம் செய்த அந்த நபரின் உறவினர் வீட்டில் இருந்து சிறுமியை மீட்ட போலீசார், காப்பகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of