100 பந்து கிரிக்கெட் ஏலம் போகாத “யுனிவர்ஸ் பாஸ்” | 100 Ball Cricket | Chris Gayle

541

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் அமைப்பால் அறிமுகம் செய்யப்பட்டது 100 பந்து கிரிக்கெட் தொடர். இந்தத் தொடர் வரும் 2020ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 16ம் தேதி வரை நடக்கிறது.

இந்தத் தொடருக்கான ஏலம் நேற்று நடைபெற்றது. இதில் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கானை ஏலம் எடுக்க 8 அணிகளும் போட்டியிட்டன. இறுதியில் டிரென்ட் ராக்கெட்ஸ் அணி அவரை ஏலம் எடுத்தது.

ஆனால் டி20 கிரிக்கெட்டில் யுனிவர்ஸ் பாஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ் கெய்லை எந்த அணியும் ஏலம் எடுக்க ஆர்வம் காட்டவில்லை. அதேபோல் தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ரபாடா, இலங்கை யார்க்கர் மன்ன் மலிங்கா ஆகியோரையும் எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை

Advertisement