9 பேரின் சம்பளம் ஆண்டுக்கு 100 கோடி ரூபாயா..!

907

ஆண்டுக்கு 100 கோடிக்கு மேல் சம்பளம் பெறும் 9 இந்தியர்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா ?

2017-18 நிதியாண்டில் ரூ. 100 கோடிக்கு மேல் சம்பளத்தை ஈட்டிய ஒன்பது நபர்கள் பற்றி வெளியிட்டுள்ளது வருமான வரித் துறை. இந்தியாவில் வரி செலுத்துவோரின் தரவுகளின் படி. ஆண்டுக்கு 1 கோடி சம்பளம் வாங்குபவர்கள் 50,000 பேருக்கும் குறைவாகவே உள்ளதாக தெரிவித்துள்ளது வருமான வரித் துறை.மேலும். நாட்டில் சம்பளம் பெற்று வரி செலுத்துவோர் மொத்தம் 2.9 கோடி பேர் எனவும். அப்படி வரி செலுத்துவோரில், 81.5 லட்சம் பேர் 5.5 லட்சம் முதல் 9.5 லட்சம் வரை சம்பளம் ஈட்டுவதாக தெரிவித்துள்ளது.

அடுத்ததாக 22 லட்சம் பேர் 10 முதல் 15 லட்சம் வரை ஊதியம் பெறுவதாகவும்.7 லட்சம் பேர் 15 முதல் 20 லட்சம் வரையிலும்.3.8 லட்சம் பேர் 20 முதல் 25 லட்சம் வரை சம்பளம் ஈட்டுவதாக தெரிவித்துள்ளது வருமான வரித்துறை.5 லட்சம் பேர் 25 முதல் 50 லட்சம் வரை சம்பளமும். 1.2 லட்சம் பேர் 50 முதல் 1 கோடி வரை ஆண்டு வருமானமாக வரித் தாக்கல் செய்வதாகவும், 49128 பேர் 1 கோடிக்கு மேல் ஊதியம் பெறுவதாகவும். 9 பேர் 100 கோடிக்கு மேல் ஆண்டு ஊதியமாக பெறுவதாக தெரிவித்துள்ளது வருமான வரித்துறை.

கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 1 கோடிக்கு மேல் சம்பளம் பெறுபவர்கள் புதிதாக 97689 பேர் வரித்தாக்கல் செய்துள்ளதாகவும். கடந்த ஆண்டை காட்டிலும் இது 20 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கிறது இந்திய வருமான வரித்துறையின் அறிக்கை ஒன்று.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of