100 நாட்களுக்கு பிறகு சிறுமி மீட்பு

844

காஞ்சிபுரம் மாவட்டம், நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த தம்பதியின் 2 வயது சிறுமி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சிறுமியின் பெற்றோரான வெங்கடேஷன், காளியம்மாள் அளித்த புகாரின் பேரில் காஞ்சிபுரம் அணைக்கட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பின்  காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி சிறுமி ஹரிணி விவகாரத்தில் இளைஞர் ஒருவரின் புகைப்படத்தை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து அந்த நபர் மும்பையில் இருப்பதாக தகவல் பரவியது.

இந்நிலையில் குழந்தை காணாமல் போன சோகத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்ட காளியம்மாளுக்கு லதா ரஜினிகாந்த், தொலைபேசியில் அழைத்து தைரியம் கூறினார். தனது குழந்தைகள் அமைப்பு மூலம் ஹரிணியை தேடிவருவதாகவும் கூறினார், பின் மும்பையில் ஹரிணி போல ஒரு சிறுமி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து மும்பை விரைந்த தனிப்படை போலீசார், மும்பை திருப்போரூர் பகுதியில் இருந்த சிறுமி ஹரிணியை பத்திரமாக மீட்டனர். இன்று காலை மீட்கப்பட்ட சிறுமி,பத்திரமாக அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். மூன்று மாதத்திற்கு பின் குழந்தையை பார்த்த பெற்றோர்கள் நெகிழ்ச்சி. `எங்கப் பொண்ணு கிடைச்சிட்டா. இனி வாழ்க்கையே சந்தோஷம்தான்” என்று ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of