கோசாலையில் பலியான 100 பசுமாடுகள்..!

701

ஆந்திரா மாநிலம், விஜயவாடா பகுதியான கோட்டூர் தடையபள்ளியில் உள்ள பசு பாதுகாப்பு இல்லத்தில் 1000-த்திற்கும் மேற்பட்ட பசுமாடுகள் உள்ளன.  அவற்றில் 100 பசுமாடுகள் திடீரென சுருண்டு விழுந்து இறந்தது. cow2

மேலும் 10 பசுமாடுகள் உயிருக்கு போராடி வருகின்றன.  இதுகுறித்து அந்த இல்லத்தின் நிர்வாகிகள் காவல் துறைக்கும், கால்நடை பராமரிப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர். 

இதைப் பற்றி அவர்கள் கூறும்போது, வெள்ளிக்கிழமை அன்று தீவனமாக அளிக்கப்பட்ட பசும்புல்லை தின்று அவை சுருண்டு விழுந்து இறந்ததாக தெரிவித்தனர். 

மேலும் உயிருக்கு போராடி வரும் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர் கூறும்போது, பசுக்கள் திடீரென்று இறந்ததற்கான சரியான காரணத்தை உடனடியாக கண்டறிய முடியவில்லை.  பிரேத பரிசோதனைக்கு பிறகுதான் தெரியவரும் என்று தெரிவித்தனர். 

அந்த பசுக்களுக்கு வழங்கப்பட்டது விஷ புல்லாக இருக்குமோ ? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.