சுரங்க நிலச்சரிவில் சிக்கி 100 பேர் பலி

126

மியான்மர் நாட்டில் சுரங்க நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.

மியான்மர் நாட்டின் கச்சின் மாநிலம், ஹபாகந்த் பகுதியில் மரகதக் கல் சுரங்கம் ஒன்று செய்யப்பட்டு வருகிறது. இந்த சுரங்கத்தில் வழக்கம்போல் இன்று தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென எதிர்பாராத விதமாக நிலச்சரிவு ஏற்பட்டது. அதற்கு முன்னர், ஒரு வார காலமாகவே அங்கு அதிகளவு கனமழையானது பெய்து வந்துள்ளது. இந்நிலையில், ஈரப்பதம் அதிகமாக இருந்ததால் இந்த நிலச்சரிவு ஏற்பட்டிருப்பதாக அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது மண் குவியல் குவியலாக விழுந்துள்ளது. இதனால் ஏராளமான தொழிலாளர்கள் மண்ணில் சிக்கிக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலச்சரிவால் இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of