அதானி மருத்துவமனையில் 1000 குழந்தைகளுக்கு மேல் பலி.., நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி தகவல்

1030

குஜராத்தின் துணை முதலமைச்சரும், சுகாதாரத்துறை அமைச்சருமான நிதீன் பட்டேல் வெளியிட்டுள்ள தகவலில், அதானி தொண்டு நிறுவனம் நடத்தி வரும் மருத்துவமனையில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 1000 குழந்தைகளுக்கு மேல் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.

இதன்படி, கடந்த 2014-15ம் ஆண்டில் 188 குழந்தைகளும், 2015-16ம் ஆண்டில் 187 குழந்தைகளும், 2016-17ம் ஆண்டில் 208 குழந்தைகளும், 2017-18ம் ஆண்டில் 276 குழந்தைகளும், 2018-19ம் ஆண்டில் 159 குழந்தைகளும் பல்வேறு வியாதிகள் மற்றும் மருத்துவ சிக்கல்களால் பலியாகி உள்ளனர்.

இவற்றில் குறைபிரசவம், தொற்றும் நோய்கள், சுவாச கோளாறுகள், மூச்சு திணறல், ரத்த நச்சுப்பாடு போன்றவை இங்கு அனுமதிக்கும் படி பரிந்துரைக்கப்பட்ட குழந்தைகளுக்கோ அல்லது பிறந்த குழந்தைகளுக்கோ ஏற்பட்டு உள்ளன.

கடந்த வருடம் மே மாதத்தில் இந்த உயிரிழப்புகள் பற்றி விசாரணை மேற்கொள்ள குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of