நாய் கறி பறிமுதல்… நீங்கள் சாப்பிடுவது நாய் கறி-யா? ஆட்டுக் கறி-யா?

1305

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து சென்னைக்கு வந்த ரயிலில், முறையாகப் பதப்படுத்தப்படாத ஆட்டிறைச்சி அனுப்பப்பட்டுள்ளதாக உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதன்படி எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வந்த ஜோத்பூர் விரைவு ரயிலில் உணவுப் பதுகாப்பு அதிகாரிகளும், சென்னை மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகளும் சோதனை மேற்கொண்டனர். அந்த தீடீர் சோதனையில் ரயிலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1000 கிலோ நாய்கறியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த பார்சல்களை பதிவு செய்தவர்கள் யார்? இவை சென்னையில் யாருக்காக கொண்டு வரப்பட்டன என்பன குறித்து உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

dog meat dog meat

இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட நாய் கறி சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு வினியோகம் செய்ய கொண்டுவரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் அசைவ பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

Advertisement