ஒரு ஓட்டுக்கு பத்தாயிரம் ? – வைகோ

184
vaiko10.3.19

ம.தி.மு.க. நிதியளிப்பு விழா பொதுக்கூட்டம் திருப்பூர் மாவட்டம் பொங்கலூரில் நடைபெற்றது. கூட்டத்தில் திருப்பூர் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் ரூ. 55 லட்சமும், நாமக்கல் மாவட்டம் சார்பில் ரூ. 10 லட்சமும் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோவிடம் வழங்கப்பட்டது. பின்னர் திரு. வைகோ நிருபர்களிடம் பேசியபோது.

பாராளுமன்றம் மற்றும் 21 சட்ட சபை தொகுதிகளுக்கான தேர்தலில் தி.மு.க. கூட்டணி நிச்சயம் மகத்தான வெற்றி பெறும். கடந்த 2004-ம் ஆண்டு தி.மு.க. அணி 40 எம்.பி. தொகுதிகளிலும் வெற்றி பெற்றதோ அது போல் மீண்டும் வரலாறு திரும்ப உள்ளது.

தற்போது ஆட்சியில் உள்ள மத்திய அரசானது அதிகாரத்தை கையில் வைத்து கொள்ள எத்தகைய தவறான முறைகளையும் கையாள வாய்ப்பு உள்ளது. போலீஸ் வாகனம், 108 ஆம்புலன்ஸ் வாகனம் ஆகியவற்றில் பணம் கொண்டு செல்ல அதிகார வர்க்கம் திட்டமிட்டுள்ளது. தி.மு.க. கூட்டணியை எதிர்த்து போட்டியிடும் அணியினர் ஒரு ஓட்டுக்கு ரூ. ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை செலவு செய்வார்கள்.

மேலும் அவர், பத்திரிகையாளர்களை தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா ஒருமையில் பேசியிருப்பது தவறானது. இவ்வாறு பேசுவது முறையல்ல. இதனை அவர் தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.