கொடைக்கானலில் 107 வயது முதியவர்..! அவருக்கு வாரிசு மட்டும் 70 பேர்..! ஆனா..,

618

கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் தேவராஜன். இவர் தற்போது திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வசித்து வருகிறார். இப்போதெல்லாம் 50 வயது, 60 வயதுகளிலேயே எல்லோரும் மறைந்துவிடும், நேரங்களில் இவர் 107 வயது வரை உற்சாகமாக வாழ்ந்து வருகிறார்.

1912-ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு, அந்தோணியம்மாள் என்ற மனைவியும், 7 ஆண் குழந்தைகள் மற்றும் 7 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் வழியே வந்தவர்கள் என 38 பேரப்பிள்ளைகள்.

அவர்களின் குழந்தைகள் என 18 கொள்ளுப்பேரன் மற்றும் பேத்திகள் உள்ளனர். மொத்தமாக சுந்தர்ராஜனுக்கு 70 வாரிசுகள் உள்ளனர். 40-வயது ஆனாலே சில வேலைகளை நம்மால் செய்ய முடியாது. ஆனால் சுந்தர்ராஜன் காலை 4 மணிக்கே எழுந்து, 2 கிலோ மீட்டர் வரை நடந்து செல்வாராம்.

கொடைக்கானலில் உள்ள பள்ளியில் சமையல் மேற்பார்வையாளராக இருக்கும் இவர், இந்த வயதிலும் உழைத்தே வாழ்ந்து வருகிறார். இவரின் ஆரோக்கியமான வாழ்க்கையின் ரகசியம் என்னவென்று கேட்டதற்கு, நான் எப்போதும் அசைவம் உண்டதில்லை. சிறுவயது முதலே, அதிகாலை, 4:00 மணிக்கு எழும் பழக்கம் உள்ளது என சிரித்துக்கொண்டே பதில் அளிக்கிறார்.