108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை

572

108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கத்தினர் 30 சதவீதம் தீபாவளி போனஸ் கோரி, வரும் 5 தேதி மாலை முதல் 6 தேதி இரவு எட்டு மணி வரை ஒரு நாள் வேளை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஒரு நாள் வேளை நிறுத்தத்தில் ஈடுபடுவதை சட்ட விரோதமென அறிவிக்க கோரி செல்வராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மணிகுமார் மற்றும் சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் அடங்கி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அவசர சேவைக்கான ஆம்புலன்ஸ் ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் மக்கள் பாதிப்படைவார்கள் என்றும், இவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட கூடாது என நீதிமன்ற உத்தரவு இருப்பதால், வரும் 5 தேதி மாலை முதல் 6 தேதி இரவு எட்டு மணி வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

மேலும், 108 ஆன்புலன்ஸ் ஊழியர்கள் பிரச்சனைகள் தொடர்பாக தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஆண்டு தோறும் இந்த பிரச்சனை வருகிறது என்றும், இதற்கான நிரந்தர தீர்வு என்ன என்பதை முழு அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை அடுத்த மாதம் எட்டாம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of