சமூக இடைவெளிக்காக 15,000 மையங்களில் தேர்வுகள் : மத்திய அரசு..!

297

கொரோனா சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக, சிபிஎஸ்இ தேர்வுக்காக 15 ஆயிரம் தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்., மற்றும் மார்ச் மாதங்களில் நடப்பதாக இருந்த 10 மற்றும் 12-ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா பாதிப்புகள் ஒருபுறம் இருந்தாலும், தேர்வை மே மாதத்தில் நடத்த சிபிஎஸ்இ திட்டமிட்டிருந்தது. ஆனால், மே 31-ம் தேதி வரையில் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டதால், மீண்டும் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே, நாடு முழுவதும் ஜூலை 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை 10 மற்றும் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும், மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், சானிடைசரை கையோடு எடுத்து வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்த நிலையில், கொரோனா சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக, சிபிஎஸ்இ தேர்வுக்காக 15 ஆயிரம் தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of