11,12 ம் வகுப்பு பொது தேர்வுகளை தொடர்ந்து 10 ம் வகுப்பு பொதுத் தேர்விலும் மொழிப்பாடம் மற்றும் ஆங்கில பாடத்திற்கான இரு தாள்களையும் ஒருங்கிணைத்து ஒரே தாளாக தேர்வு நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நடப்பு கல்வியாண்டு முதல் இது அமல்படுத்தப்படுவதாகவும் அவ்வாறு தேர்வு நடத்தும் போது பாடங்களின் மதிப்பீடு பாதிக்காதவாறும் முதல் மற்றும் இரண்டாம் தாள்களிலுள்ள அனைத்து பாடங்களில் உள்ள சாராம்சங்களையும் உள்ளடக்கியதாகவும் தேர்வுகள் நடத்திட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதனால் மாணவர்களுடைய மனச் சுமையும் குறையும் என்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் 10 லட்சம் மாணவர்களுக்கு ஒரே தாளாக தேர்வு நடத்தப்படுவதால ஆண்டுக்கு மூன்று கோடி பேப்பர்கள் சேமிக்கப்படும் என்றும் 20 லட்சம் விடைத்தாள்கள் திருத்தும் பணி குறையும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.