10ம் வகுப்பு தேர்வு இன்று தொடங்குகிறது

327

தமிழகம், புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது. இதில் 9 லட்சத்து 97 ஆயிரம் மாணவ மாணவியர் பங்கேற்கின்றனர். இந்த ஆண்டு மொழிப்பாடத் தேர்வுகள் காலை வேளையில் நடப்பதற்கு  பதிலாக மதியம் நடக்கும் என்று அரசுத் தேர்வுகள் துறை அறிவித்துள்ளதால் இன்றைய தேர்வு மதியம் 2 மணிக்கு தொடங்கும்.தமிழகம், புதுச்சேரியில் 12 ஆயிரத்து 546 பள்ளிகளில் படிக்கும் 9 லட்சத்து 59 ஆயிரத்து 618 பள்ளி மாணவர்கள், 38 ஆயிரத்து 176 தனித் தேர்வர்கள் என மொத்தம் 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 பேர் தேர்வு  எழுதுகின்றனர். தனித் தேர்வர்களில் 12 ஆயிரத்து 395 பேர் மாணவியர், 25 ஆயிரத்து 777 பேர் மாணவர்கள். இவர்கள் தவிர 4 திருநங்கையரும் தேர்வு எழுதுகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of