10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் இப்படி தான் இருக்குமாம்..!

1552

நடப்பு கல்வியாண்டில் 10 வகுப்பிற்கு புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்பட்ட நிலையில் கணக்கு பாடத்தின் வினாத்தாள் தொடர்பாக ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இடையில் குழப்பம் நிலவியது.


பள்ளிக்கல்வித்துறை பொதுத்தேர்விற்கான கணித வினாத்தாள் எவ்வாறு இருக்கும் என்று தற்போது தெரிவித்துள்ளது.
நடப்பு கல்வியாண்டில் பத்தாம் வகுப்பிற்கு பாடத்திட்டங்கள் அனைத்தும் மாற்றி அமைக்கப்பட்டு புதிய பாடத்திட்டங்களை மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

தற்போது ரிவிசன் தேர்வுகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் 10 வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத உள்ள நிலையில் இதற்கான மாதிரி வினாத்தாள்களை எல்லாம் பாடவாரியாக பள்ளிக் கல்வித்துறையால் வெளியிட்டது.

ஆனால் அதில் கணித வினாத்தாளில் வடிவியல் பகுதியில் 2 கேள்விகளுக்கு பதிலாக 1 கேள்வியும், அதேபோல் கிராஃப்(Graph) பகுதியிலும் 2 கேள்விகளுக்கு பதிலாக 1 கேள்வி மட்டுமே இடம்பெற்றது.

இதனால் தேர்வு எழுத இருக்கும் மாணவர்கள் மற்றும் ஆசியர்கள் குழம்பிய நிலையில் மாணவர்கள் மதிப்பெண் பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்று புகார்கள் குவிந்தது.இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.

அந்த அறிவிப்பில் அரையாண்டு வினாத்தாளை போலவே வடிவியல் மற்றும் கிராஃப் பகுதிகளில் தலா 2 கேள்விகள் அடங்கிய வினாத்தாள் தான் பொதுத்தேர்வில் இருக்கும் என்று தெளிவாக தெரிவித்துள்ளது.இதனால் மாணவர்கள் மற்றும் ஆசியர்கள் மத்தியில் நிலவி வந்த குழப்பத்தை பள்ளிக்கல்வித்துறை தீர்த்துள்ளது.

Advertisement