ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு..!

215

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் பகுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிலர்  தங்கள் உறவினர் திருமணத்துக்குச் சென்றுவிட்டு வேனில் திரும்பிக் கொண்டிருந்தனர்.ராம்கார் கிராமத்தின் அருகில் நள்ளிரவு 12 மணியளவில் வேன் வந்துகொண்டிருந்தபோது, மற்றொரு வாகனத்தின் மீது மோதியது.

மோதிய வேகத்தில் திருமணத்துக்கு சென்று வந்த வேன், 50 அடி தூரத்துக்குத் தூக்கி வீசப்பட்டது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

2 பேர் கடுமாயமடைந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.