11 பொறியியல் கல்லூரிகளை மூட முடிவு

309

ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள், அங்கீகாரம் நீட்டிப்பு, இணைப்பு அந்தஸ்து, மாணவர் சேர்க்கைக்கு அவை சார்ந்த பல்கலைக்கழகங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE) தெரிவித்திருந்தது.

அதன்படி 2020 -21 ஆம் கல்வியாண்டிற்கான அங்கீகாரம், இணைப்பு அந்தஸ்து மற்றும் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க பொறியியல் கல்லூரிகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தியது.

இதற்கான கால அவகாசம் முடிந்த நிலையில், தமிழகத்தில் உள்ள 557 பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் 537 கல்லூரிகள் மட்டுமே முழுவதுமாக விண்ணப்பித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விண்ணப்பிக்காத 20 கல்லூரிகளில், 11 பொறியியல் கல்லூரிகள் அங்கீகார நீட்டிப்பு, இணைப்பு அந்தஸ்து, மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்காததும், வரும் கல்வியாண்டு முதல் கல்லூரியை மூடுவதற்கும் அண்ணா பல்கலைக்கழகத்திடம் விண்ணப்பித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் அந்த கல்லூரிகள் எவை..? என்பது குறித்தும், அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பையும் அண்ணா பல்கலைக்கழகம் விரைவில் தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of