11 மாதம் ராணுவ பயிற்சி முடித்த ராணுவ அதிகாரிகளுக்கு நாளை பயிற்சி நிறைவு விழா

667

ஒவ்வொரு முறையும் பயிற்சி நிறைவு விழா நடைப்பெறுவதற்கு முன்தினம் சாகச நிகழச்சி விழா நடைபெறுவது வழக்கமான ஒன்றாகும். இம்முறை 11 மாத காலம் ராணுவ பயிற்சி பெறும் மாணவர்களுக்கு நாளை பயிற்சி நிறைவு பெறுகிறது.

இதனை முன்னிட்டு பயிற்சிக்கு ஒருங்கிணைந்த சாகச நிகழ்ச்சி சென்னை பரங்கிமலையில் நடைபெற்றது. இதில் இராணுவ அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்துக்கொண்டனர்.

இதில் குதிரை சவாரி, கலரி, ஜிம்னாஸ்டிக் சாகசங்கள், மோட்டார் வாகன சாகசங்கள், வான்வழி சாகசங்கள் உள்ளிட்டவைகளை ராணுவ வீரர்கள் மேற்கொண்டனர். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்தவர்களை வெகுவாக கவர்ந்தன.

இந்நிலையில் நாளை நடைபெற இருக்கும் பயிற்சி நிறைவு விழாவில் சிறப்பாக பயிற்சி மேற்கொண்ட இராணுவ அதிகாரிகளுக்கு பதக்கங்களும், பரிசுகளும் வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.